இவர் அப்படி இல்ல.. தங்கையுடன் வந்த விவாகரத்தான நடிகர்- புகழ்ந்து தள்ளும் இணையவாசிகள்
திருமண நிகழ்விற்கு விவாகரத்தான நடிகர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய தங்கையுடன் வந்திருந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.
இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் இவரின் சினிமா வாழ்க்கை அத்தோடு ஆரம்பித்தது.
இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை பெற்றோர்கள் சம்பதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையொன்று இருக்கின்றது.
இந்த நிலையில் சமிபத்தில் GV பிரகாஷ்- சைந்தவி இருவரும் தனித்து வாழப்போவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர்.
விவாகரத்து
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து கடந்த 11 வருடங்களாக திருமண வாழ்க்கையில் இருந்த இருவருக்கும் என்ன நடந்தது? என சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பு எழுந்தது.
அந்த வரிசையில், ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதிகளின் விவாகரத்து குறித்து ஜி.வி.பிரகாஷ் மனந்திறந்து பேசியுள்ளார்.
அதாவது, விவாகரத்துக்கு பிறகும் ஜீ.வி மற்றும் சைந்தவி இருவரும் ஒன்றாக பணியாற்றுவது ஆச்சர்யமாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வரும் நிலையில் அது ஏன் என ஜீ.வி.பிரகாஷே பதில் அளித்து இருக்கிறார்.
"நாங்கள் ரொம்ப professional. ஒருவருக்கொருவர் மீது மரியாதையும் இருக்கிறது. அந்த மரியாதைக்காக நாங்கள் ஒன்றாக பணியாற்றுகிறோம்" என ஜீ.வி கூறி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து, இருவருக்கும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இருவரும் சேர்ந்து தான் வேலைச் செய்து வருகிறார்கள்.
ரவி மோகன் போல் இவர் அல்ல...
ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக சென்றுக் கொண்டிருந்த வேலையில், ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து தகவல் வெளியானது. ஆனால் தற்போதும் பணி நேரங்களில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.
நேற்றைய தினம்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு வந்த ரவிமோகன் சர்ச்சையில் சிக்கிய கெனிஷாவை தன்னுடன் அழைத்து வந்து, மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். ஆனால் அதே விவாகரத்து சர்ச்சைக்கு பின் திருமணத்திற்கு வந்த ஜிவி. பிரகாஷ் அவருடைய தங்கையுடன் வந்திருக்கிறார்.
இரண்டு காணொளிகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் விமர்சனத்தை கொட்டி வருகிறார்கள். அத்துடன் “ரவி போன்று அல்லாமல் ஜிவி பிரகாஷ் நல்ல மனிதர்..” என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |