BEACH-ல் ஒன்றுசேர்ந்து குத்தாட்டம் போட்ட குத் வித் கோமாளி பிரபலங்கள்! தீயாய் பரவும் வீடியோக்காட்சி
குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஒன்றுசேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குத் வித் கோமாளி
பொதுவாகவே ஒரு நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்கும் போட்டியாளர்கள் வெளியுலகில் இணை பிரியாத நண்பர்களாக வலம் வருவது வழக்கம்.
இதன்படி, பிரபல தொலைக்காட்சியில் “குத் வித் கோமாளி” நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை செய்யும் திறமைக் கொண்டவர் கோமாளிகளாக நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவுவார்கள்.
இதற்கு பக்கத்தில் இருப்பவர்கள் குக்களாக சமையல் செய்து அடுத்த அடுத்த ரௌண்ட்டுக்கு செல்வார்கள்.
வைரலாகும் வீடியோக்காட்சி
இந்நிலையில் குத் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாகக் கொடுத்திருந்தார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ருத்திகா, தர்ஷன், சந்தோஷ் மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இவர்கள் நால்வரும் கடற்கரையில் இணைந்து விளையாடி நடனமாடி மகிழ்ந்துள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சிகளை ஸ்ருத்திகா அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நால்வரையும் ஒன்றாக பார்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என ஆதரைவான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.