குருப்பெயர்ச்சி பலன்கள்: கும்ப ராசிக்கு இனி எப்படி இருக்கப்போகிறது தெரியுமா?
குருப்பெயர்ச்சி பிலவ வருடம் பங்குனி மாதம் 30ம் தேதியன்று இயற்கை சுபரான குருதேவர் சுய நட்சத்திரமான பூரட்டாதி மூன்றாம் பாத நட்சத்திரத்தில் இருந்து கும்ப ராசி சுய நட்சத்திரமான பூரட்டாதி நான்காம் பாத நட்சத்திரத்திற்கு மீன ராசிக்கும் பெயர்ச்சியாகுகிறார்.
அதன் பின் புதன்கிழமை பின்னிரவு (14.04.2022) வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை 04.09 மணியளவில், திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் புதன்கிழமை மாலை 03.49 மணியளவில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகி 22.04.2023 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார்.
துலாம் ராசிக்கு எப்படி இருக்கும் என்றால், குருபெயர்ச்சியில் ஐந்தாம் ஸ்தானமான புத்திர ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
இதனால் குடும்ப உறுப்பினர்கள் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் அமையலாம்.
2022 குருபெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசிக்கு கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம்
அதிர்ஷ்ட பலன்கள்
பயனற்ற பயணங்களை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையை ஏற்படுத்தும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். மேலும், மாணவர்கள் பாடங்களை சற்று கவனத்துடன் படிக்க வேண்டும்.
புதிய நண்பர்களின் அறிமுகம் மாற்றத்தை உருவாக்கும். அடுத்து வியாபார பணிகளில் இருந்துவந்த சோர்வுகளும், மந்தத்தன்மையும் படிப்படியாக குறையும்.
நிலம் விற்பது, வாங்குவது தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும்.
மனதில் இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் புதிய நுட்பங்களை கையாளுவீர்கள். இந்த குருபெயர்ச்சியின் மூலம் செய்கின்ற சில பணிகளில் தடைகளும், உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகளும் காணப்படும்.
வழிபாடு
வியாழக்கிழமை தோறும் காலபைரவரை வழிபாடு செய்துவர கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.