Guru Peyarchi 2026 : குரு வக்ர நிவர்த்தி... தங்கத்தை குவிக்கப்போகும் 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகள் முக்கிய இடம் வகிக்கின்றது. கிரக மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக தாக்கங்களை ஏற்ப்படுத்தும் என நம்பப்படுகின்றது.
ஜோதிடத்தில் குரு பகவான் சக்தி வாய்ந்த கிரகமாவார். குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அப்படி குரு பகவானின் கிரக மாற்ற நிலை அனைத்து ராசியினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக மார்ச் 11 ஆம் திகதி நடைபெறும் குரு மாற்றமானது குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவை திறக்கப்போகின்றது.
அப்படி குரு பெயர்ச்சியால் உச்சகட்ட சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியின் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

குரு வக்ர நிவர்த்தி அடைவதால் மிதுன ராசியினரின் தொழில் வாழ்க்கையில் அமோகமான முன்னேற்றம் காணப்படும். குறிப்பாக பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
புதிய வருமானத்துக்கான வாய்ப்புகள் கூடிவரும். குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். இதுபோல் இவர்களின் வாழ்வில் பொன் பொருள் செல்வம் என்பன குவியப்போகின்றது.
வியாபரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் அமையும். புதிய சொத்து வாங்கும் யோகம் கூடிவரும். மொத்தத்தில் இவர்களின் வாழ்வில் பொற்காலம் ஆரம்பமாகப்போகின்றது.
சிம்மம்

குரு வக்ர நிவர்த்தி அடைவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு மார்ச் 11 ஆம் திகதி முதல் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் சாதக மாற்றங்கள் உருவாகப்போகின்றது.
தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும் இவர்களின் பொருளாதாரா நிலையில் அசுர வளர்ச்சி ஏற்படும். குரு பனவான் தங்கத்துடன் தொடர்புடையவர் என்பதால், பொன் வீட்டில் குவியும். அதாவது தங்கம் வாங்குவதற்கான யோகம் காணப்படுகின்றது.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவால் அதிகாரம் மிக்க பதவியில் அமர்வதற்கான வாய்ப்புகள் தானகவே அமையும். பணவரவு திருப்பதிகரமாக இருக்கும்.
கன்னி

குரு வக்ர நிவர்த்தி அடைவதால் கன்னி ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபார விடயங்களில் அசுர வளர்ச்சி காண்பார்கள். இவர்களை தேடி செல்வ செழிப்பு வரப்போகின்றது.
இவர்களின் நீண்ட நாள் கடன் பிரச்சினைகள் தீரும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று போராடியவர்கள் இந்த காலகட்டத்தில் வெற்றி காணப்பார்கள். குருவின் ஆதியால் தங்கத்தில் முடதலீடு செய்யும் வாய்ப்பு கூடிவரும்.
குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குறிப்பாக தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படுவது உறுதி.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |