பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி!
ஜோதிட ரீதியில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் நவகிரகங்களில் ராஜ குருவாக அறியப்டும் குரு பகவான் தற்போது புனர்பூச நட்சத்திரத்தில் பயணித்து வருகின்ற நிலையில், ஜூன் 18 ஆம் தேதி பூசம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

குரு பகவான், சனியோடு தொடர்புடைய பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவதால் 'குரு புஷ்ய யோகம்' உருவாகின்றது. அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது.
அப்படி குரு நட்சத்திர பெயர்ச்சியால் தொழில், மற்றும் நிதி நிலையில் உச்சகட்ட பலன்களைஅனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டு வரப்போகிறது.
ஆன்மீக செயல்பாடுகள் மற்றும் வழிபாடுகளில் அதிக ஈடுபாடு ஏற்படும். காதலிப்பவர்களுக்கு திருமண பந்தத்தில் இணைவதற்கான வாயப்பு கூடிவரும்.
பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். மேலும், புதிய முதலீடுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபத்தைத் கொடுக்கும்.
கன்னி

குருவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால், கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் புத்துணர்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை பல மடங்கு உயர்ந்து, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
இருப்பினும், ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சீரான உணவு முறையையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டமான காலகட்டத்தை கொடுக்கப்போகின்றது. இந்த காலகட்டத்தில் தொட்தெல்லாம் பொன்னாகும்.
புதிய வருமான வாய்ப்புகள் உருவாகி, பொருளாதார நிலை கணிசமாக மேம்படும். முதலீடுகள் மூலம் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் அடுத்த கட்ட வளர்ச்சியை அடைய சிறந்த சந்தர்ப்பங்கள் கிடைக்கும். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய நிறுவனத்தில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |