உச்சத்தில் இருக்கும் குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்... 3 ராசிகளுக்கு காத்திருக்கும் ராஜயோகம்
குரு (வியாழன்) 12 ஆண்டுகளுக்கு பின்பு மேஷத்தில் வக்ர நிலையில் பயணிக்கப் போவதால், செப்டம்பர் 4ம் தேதி முதல், பின்னோக்கி செல்ல உள்ளது. இதனால் சில ராசிகளுக்கு சுப பலன்கள் காணப்படும்.
வியாழன்(குரு) கிரகமானாது செப்டம்பர் 4ம் தேதி இரவு 07.39 மணிக்கு மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது. பின்பு செப்டம்பர் 4 முதல் டிசம்பர் 31ம் தேதி காலை 8.09 மணி வரை பிற்போக்கு நிலையில் காணப்படும்.
118 நாட்களுக்கு குரு இதே நிலையில் தான் இருப்பார். எனவே வியாழனின் பிற்போக்கு இயக்கத்தால், 3 ராசிக்காரர்களுக்கு சுமார் 4 மாதங்கள் மகிழ்ச்சி அலை வீசுவதுடன், வெற்றியும் குவியும்.
மேஷம்
வியாழனின் இந்த வக்ர பெயர்ச்சியினால் மேஷ ராசியினர் வாழ்வில் நல்ல பல்கனை காணலாம். அதிஷ்டம் வலுவாக உயர்வதுடன், எந்த வேலையிலும் வெற்றியே ஏற்படும். முன்பை விட அதிகமாக சேமிக்க ஆரம்பிப்பதுடன், நிதிநிலையிலும் வலுவாக காணப்படுவீர்கள். வியாழன் தோறும் தண்ணீரில் மஞ்சள் சேர்த்து குளிக்கவும்.
கடகம்
வியாழன் கிரகத்தின் இந்த மாற்றத்தினால் 118 நாட்ககளில் புதிய வேலை வாய்ப்பினை பெறுவதுடன், பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து முன்பை விட மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள். வணிகத்தில் லாபம் கிடைப்பதுடன், முதலீடுகளும் லாபகரமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த 4 மாத கலத்திற்கு செல்வம் பெருகுவதுடன், சொத்துக்களால் ஆதாயம் அடையவும் செய்வீர்கள், புதிய கார், புதிய வீடு அல்லது மனை வாங்கும் யோகமும், வாங்கிய பணத்தை தராமல் இருப்பவர்கள் இந்த நேரத்தில் திருப்பி செலுத்துவார்களாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |