இன்று குரு - சந்திரன் சேர்க்கை: பணக்கட்டை அள்ளப்போகும் கோடீஸ்வர ராசிகள் யார்?
ஏப்ரல் 21, 2026 அன்று உருவாகும் 'கஜகேசரி ராஜயோகம்'பல ராசிகளுக்கு நம்பிக்கை மற்றும் வெற்றியின் புதிய வழிகளைத் தரும். இதை மொத்தமாக எந்த ராசிகள் பெறும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

இன்று குரு - சந்திரன் சேர்க்கை
ஜோதிடத்தின் படி கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றிக்கொள்ளும் போது பல ராசிகளின் வாழ்க்கையில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இன்று மிகவும் அரிய ராஜயோகம் ஒன்று உருவாகிறது.
இது தான் கஜகேசரி ராஜயோகம். இது வெற்றி, கௌரவம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாகப் போற்றப்படும் ஒரு யோகமாகும். இந்த யோகத்தின் தாக்கம் சில ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிட்ட மாற்றத்தை உண்டாக்கும்.

கஜகேசரி ராஜயோகம் என்றால் என்ன?
குருவும் சந்திரனும் (Jupiter - Moon) ஒரே ராசியில் சேரும் போது கஜகேசரி யோகம் உருவாகும்.
இந்த யோகம் அறிவுக்கூர்மை மிக்கவராகவும், செல்வாக்கு மிகுந்தவராகவும், வெற்றி போன்றவற்றை அள்ளிக்கொடுக்கும் யோகமாகும்.
மேலும் ஒரு ராசியில் இந்த யோகம் உருவாகும் போது அது அவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்குவதுடன் பல மகிழ்ச்சியையும் உண்டாக்கும்.

மிதுனம்
- இந்த கஜகேசரி ராஜயோகம் மிதுன ராசியில் உருவாகுவதால் இதன் தாக்கம் உங்கள் ராசிக்கு வீரியமாக இருக்கும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன்கள் வலுப்பெறும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். பண வரவு அதிகரிக்கும்.
சிம்மம்
- சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். பண வரவிற்கான புதிய வழி பிறக்கும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான காலம். எதை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.பழைய புதிய திட்டங்கள் விரைவில் முடியும். நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்கள் உங்களுக்கு இன்னும் பெருக வாய்ப்புக்கள் குவியும்.
கன்னி
- இந்தக் கஜகேசரி யோகம் கன்னி ராசியைச் சேர்ந்தவர்களின் தொழில் வாழ்க்கையில் நன்மையை அள்ளி கொடுக்கும். பணியிடத்தில் உங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம். பெரிய முக்கிய பொறுப்புக்களை உங்களிடம் ஒப்படைப்பார்கள். தொழில் துறையில் ஒரு உஎதிர்பாராத வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிக்கப்படுவீர்கள்.
தனுசு
- தனுசு ராசியினருக்கு, இக்காலகட்டம் உறவுகள் நண்பர்கள் மூலம் நன்மை பெறக்கூடுீயுதுர்கு ஆமையும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் நிலவும். தொழில் கூட்டாண்மைகள் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்குத் திருமண வரன்களும் அமையும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள்.
கும்பம்
- கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த கிரக அமைப்பு கல்வி மற்றும் குழந்தைகள் தொடர்பான நற்செய்திகளைக் கொண்டு வரும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் உருவாகும். வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் அது நடந்தே தீரும். சொத்துக்கள் பெருக வாய்ப்பு உள்ளது. பண வரT அதிகமாகும். செலவு குறையும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).