Viral Video: ஒரு நண்டை பிடிக்க எவ்வளவு கஷ்டம்னு பாருங்க... விடாமுயற்சி கடைசி வெற்றி
Gulls பறவை ஒன்று நண்டை வேட்டையாடி அதனை உணவாக்கும் முன்பு பலமுறை அதனை தவறவிட்டு, இறுதியாக அதனை எடுத்துக்கொண்டு கம்பீரமாக பறந்துள்ளது.
பறவையிடம் சிக்கிய நண்டு
சமீப காலமாக கழுகு மற்றும் நாரையின் மீன் வேட்டை காட்சியை அதிகமாக அவதானித்து வரும் நிலையில், தற்போது Gulls பறவை ஒன்று நண்டை வேட்டையாடிய காட்சியினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.

அந்த வகையில் இங்கு Gulls பறவை ஒன்று தனது பசிக்காக நண்டு ஒன்றினை வேட்டையாடியுள்ளது. குறித்த நண்டை தனது அலகினால் கொத்தினால் பலமுறை அதனை தண்ணீருக்குள் தவறவும் விட்டுள்ளது.
இதற்கு நண்டின் தாக்குதல் காரணமா? அல்லது நண்டின் ஆக்ரோஷம் தணிவதற்கு இவ்வாறு செய்ததா? என்று தெரியவில்லை.
பலமுறை தண்ணீருக்கு தவறவிட்டு இறுதியாக அதனை வாயில் கவ்விக்கொண்டு கம்பீரமாக பறந்துள்ளது. இக்காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |