கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது? மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா... எச்சரிக்கை
தினமும் கொய்யா பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.
கொய்யாபழத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் இதய வால்வுகளில் கொழுப்புகளைத் தேங்க விடாமல் பாதுகாக்கிறது.
இது இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதயப் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் தங்களுடைய உணவில் அடிககடி கொய்யாப் பழத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் கொய்யா பழத்தினை எந்த நேரத்தில் எப்படி சாப்பிடுகின்றோம் என்பதை பொருத்து ஆரோக்கித்தில் மாற்றம் ஏற்படுகின்றது.
எப்போது சாப்பிட வேண்டும்?
கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
ஏனென்றால் கொய்யாவில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் அது வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும்.
எனவே இதனை சாப்பிடுவதற்கு முன்பு இரும்புச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் .
அதேபோல் இரவு நேரத்தில் கொய்யாப்பழம் சாப்பிடக்கூடாது.