முடியை நீளமாக வளரவைக்கும் சத்தான க்ரீன் பிரியாணி செய்து பாருங்க
கொத்தமல்லி, புதினாவில் அதிகமான சத்துக்கள் காணப்படுகின்றன. முடி வளர்ச்சிக்கு இவை பெரிதும் உதவுகின்றன. ஆனால், ஒரு சில குழந்தைகளுக்கு அவற்றை உண்பதில் அந்தளவுக்கு விருப்பமில்லை. அதனால் அவர்கள் விரும்பும் வகையில் அவற்றைக் கொண்டு பிரியாணி செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி - 1 கப்
புதினா - 1 கப்
பச்சை மிளகாய் - 5
பட்டை -சிறிய துண்டு
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியைக் கழுவி பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். அதன்பின்பு உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும்.
பின்னர் புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் என்பவற்றை போட்டு 5 நிமிடம் வதக்கி, ஆற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதன்பின்பு வாணலியில் நெய் விட்டு சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்து பின்பு தக்காளி மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் உருளைக்கிழங்கு, அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
அதற்கடுத்ததாக அரிசியை நெய்யில் வறுத்து, குக்கரில் சேர்த்து அதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
இறுதியாக குக்கரை மூடி மிதமான தீயில் வேகவிட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கவும். க்ரீன் பிரியாணி தயார்.