viral video: பச்சை அனகொண்டா பாம்பிடம் தாறுமாறாக கடிவாங்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது?
நபரொருவர் பச்சை அனகொண்டா பாம்பிடம் தாறுமாறாக கடிவாங்கும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தை வைரலாகி வருகின்றது.
உலகின் கனமான பாம்பு என்று புகழ்பெற்ற பச்சை அனகோண்டா (யூனெக்டஸ் முரினஸ்) தென் அமெரிக்காவின் அடர்ந்த காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழ்கிறது.
மனிதர்களை உட்கொள்ளும் அனகோண்டாக்களின் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் அரிதாகவே இருந்தாலும், 20 அடி மற்றும் 200 பவுண்டுகளுக்கு மேல் எடைகொண்ட அனகொண்டாக்கள் மனிதர்களை விழுங்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டவையாக இருக்கம்.
பெரு, பொலிவியா, பிரேசில் போன்ற நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் இந்த மழைக்காடுகள், எண்ணற்ற உயிரினங்களின் புகலிடமாகத் காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த காடுகள் தான் அனகொண்டாக்களின் இருப்பிடமாக அறியப்படுகின்றது. இது தொடர்பாக திரைப்படங்களும் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன.
இந்நிலையில் நபரொருவர் பச்சை அனகொண்டா பாம்பிடம் கடிவாங்கும் அரிய சம்பவமடங்கிய காணொளியொன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |