GPay, phonepe, Paytm போன்ற UPI செயலிகள் திடீர் முடக்கம்... அதிர்ச்சியில் மக்கள்
இன்று பகல் பொழுதில் சில மணிநேரம் கூகுள் பே, போன் பே, பேடிஎம் என எந்த ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலியும் இந்தியா முழுவதும் வேலை செய்யவில்லை.
இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்து குவிந்துள்ளன.
இது இந்த செயலிகளோடு மட்டும் நின்ற விடாமல், இந்த பணப் பரிவர்த்தனை பிரச்னை ஹெச்.டி.எஃப்.சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட சில வங்கிகள் செயலிகளுக்கும் நடந்துள்ளது.
இது முதல்முறை அல்ல. கடந்த மார்ச் 26-ம் தேதி இரவும் இதே நிலை இந்தியாவில் ஏற்பட்டது. கிட்டதட்ட 20 நாட்களுக்குள் மீண்டும் யு.பி.ஐ செயலிகள் வேலை செய்யவில்லை.
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவிட்ட இந்தியா இந்தப் பிரச்னையால் பெரிதும் இன்று பாதிக்கப்பட்டது.
NPCI is currently facing intermittent technical issues, leading to partial UPI transaction declines. We are working to resolve the issue, and will keep you updated.
— NPCI (@NPCI_NPCI) April 12, 2025
We regret the inconvenience caused.
காரணம் என்ன?
யு.பி.ஐ-யை நிர்வாகிக்கும் தேசிய பேமண்ட்ஸ் கார்பரேஷன் (NPCI), "இப்போது என்.பி.சி.ஐ தொழில்நுட்ப பிரச்னையைச் சந்தித்துள்ளது. அதனால்தான், பணப் பரிவர்த்தனைகள் தடைப்படுகின்றன.
இதைச் சரி செய்ய வேலை நடந்து வருகிறது. இடையூறுக்கு மன்னிப்பு" என்று இந்தப் பிரச்னை குறித்துப் பதிவிட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |