நடுவரையே அசிங்கப்படுத்திய ஜிபி முத்து! பதிலுக்கு நடுவர் கொடுத்த தரமான பதிலடி
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் ஜிபி முத்து நடுவரையே அசிங்கப்படுத்திய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
குக்கு வித் கோமாளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி ஆகும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட இந்நிகழ்ச்சியினை மக்கள் அதிகமாக விரும்புவதற்கு காரணம் இதில் அரங்கேறும் கொமடிகள் தான். இந்நிலையில் இதுவரை குக் வித் கோமாளி மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சமையலில் அசத்தும் போட்டியாளர்களாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகர் ராஜ் ஐயப்பா, நடிகை ஷிவாங்கி, விஜே விஷால், நாய் சேகர் படத்தை இயக்கிய கிஷோர், ஜிகர்தண்டா நடிகர் காளையன், நடிகை விசித்ரா, ஆன்ட்ரின் நௌரிகட் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர் கலக்கி வருகின்றனர்.
இதில் ஓட்டேரி சிவா முதல் வாரம் மட்டும் கலந்து கொண்ட நிலையில், பின்பு வெளியேறினார். கடந்த வாரம் கிஷோர் போட்டியாளரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஜிபி முத்துவின் அலப்பறை
இந்த வாரம் இம்யூனிட்டி வாரம் என்பதால், இம்யூனிட்டி பேண்டை வாங்க குக்குகள் மத்தியில் கடுமையாக போட்டி நிலவி வருகின்றது.
புரோட்டா சால்னா செய்வதற்கு டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், ஜிபி முத்து தனது காதில் ஓடிக்கொண்டிருந்த பாட்டை பாடிக்கொண்டு நடுவரையே அசிங்கப்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலுக்கு நடுவர் ஜிபி முத்துவை கீழே போட்டு குமுறு குமுறுனு போட்டு தாக்கிய காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.