5 லட்சம் வரை இலவச மருத்துவம்! யாருக்கெல்லாம் தெரியும்?
எதிர்பாராத சம்பவங்கள், திருப்பங்கள் நிறைந்ததே வாழ்க்கை, நாம் என்னதான் கவனமாக சாலையில் சென்றாலும் மற்றவர்களால் கூட விபத்துக்கள் நேரிடலாம், எவ்வளவு தான் ஜாக்கிரதையாக உடல்நிலையில் கவனம் எடுத்துக்கொண்டாலும் தொற்றுநோய்கள் உட்பட பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம்.
இந்த மாதிரியான காலகட்டங்களில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வதை காட்டிலும் பணம் தொடர்பான சிந்தனைகளே பலருக்கும் வரும்.
இந்த மாதிரியான சூழலில் தமிழக அரசின் கைகொடுக்கும் திட்டம் தான் “முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்”.
தமிழகத்தை சேர்ந்த அனைவரும் இதில் பயன்பெறலாம், குடும்ப அட்டையில் உங்களது பெயர் இருந்தாலே போதும், 5 லட்சம் வரை 1 வருடத்திற்கு மருத்துவத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த திட்டம் 2009ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது.
800 அரசு மருத்துவமனைகளிலும், 90 தனியார் மருத்துவமனைகளிலும் இதை பயன்படுத்திக்கொள்ள அனுமதி உண்டு.
விபத்து, அவசரம் என்பதையும் தாண்டி இதய மாற்று அறுவைசிகிச்சை, சிறுநீரக அறுவைசிகிச்சை, MRI ஸ்கேன், எக்ஸ்ரே உட்பட வழக்கமான பரிசோதனைகளுக்கு இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
குடும்ப அட்டையில் உறுப்பினர், ஆதார் அட்டை மற்றும் VAO கையெழுத்துடன் வருமான சான்றிதழ் இருந்தாலே இந்த திட்டத்தில் சேரலாம்.
கலெக்டர் அலுவலகம் சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதற்கான அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.