கோபிக்கு பதில் நடிகர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலடசுமி சீரியலில் நாயகனாக நடித்துவரும் நடிகர் சதீஷ் குறித்த சீரியலிலிருந்து விலக இருக்கும் நிலையில், இவருக்கு பதில் நடிக்கும் நடிகர் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலடசுமி சீரியலில் நடிகர் சதீஷ் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வரும் பெண்ணாக பாக்கியா வலம்வருகின்றார்.
பாக்கியாவின் எதாரத்தமான நடிப்பிற்கு ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு அதிகமாகவே இருக்கின்றது. இதில் இவருக்கு கணவராக நடித்து கோபி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகின்றார்.
ஆம் தனது முன்னாள் காதலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபி பாக்கியா வசிக்கும் வீட்டிலேயே வசித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் குறித்த சீரியலிலிருந்து விலக இருப்பதாக சமீபத்தில் காணொளி வெளியிட்டிருந்தார். இவருக்கு பதில் நடிக்க இருக்கும் நடிகருடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
பல சீரியலில் நடித்த நடிகர் அரவிந்த் கோபியாக நடிக்க இருக்கின்றார். இவர்கள் இருவருக்கு 20 ஆண்டு கால நட்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.