கூகுள் பே, ஃபோன் பே ஆப்கள் சில நாட்களுக்கு இயங்காதா!.. தேசிய கட்டணத்தின் அதிர்ச்சி முடிவு
இன்றைய நவீன காலக்கட்டத்தில் பணபரிமாற்றம் என்பது எளிதாகிவிட்டத்து. முன்பெல்லாம் வங்கிகளில் கால் கடுக்க நின்று ஒரு நாள் முழுக்க நேரத்தைச் செலவிட்டு பணத்தைப்பெறவோ எடுக்கவோ மக்கள் சிரமப்பட்டனர். ஆனால், தற்போது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவருகின்றனர்.
அப்படி எளிதாக பணபரிமாற்றத்தை செய்யப் பயன்படும் ஆப்கள் தான் கூகுள் பே, மற்றும் ஃபோன் பே. #Googlepay, #PhonePe இந்த ஆப்கள் மூலம் எளிதாக பணபரிமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சில நாட்களுக்கு இயங்காது என இந்திய தேசியக் கட்டணக் கழகம் தெரிவித்துள்ளது.
அதாவது, யூனிஃபைட் பேமண்ட் இண்டர்ஸ்பேஸ் –ஐபயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அடுத்த சில நாட்களுக்கு காலை 1 மணி முதல் 3 மணி வரை இந்த ஆப்கள் சரியாக இயங்காது என இந்திய தேசியக் கட்டணக் கழகம்( NPCi) தெரிவித்துள்ளது.