கூகுளில் நோய் தொடர்பான கேள்விகளை அறிவது சரியா? மருத்துவர்களின் எச்சரிக்கை!
இன்றைய நவீன காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள், எந்த ஒரு விஷயத்திற்கும் விரைவான பதில்களை தேட கூகுள் சர்ச் என்ஜினை நாடி வருகின்றனர். அதிலும் பருவகால நோய் அல்லது வேறு ஏதேனும் பொதுவான நோய்களுக்கு ஒத்த சில அறிகுறிகளைக் பெற்றிருக்கும் போதெல்லாம் பலர் கூகுள் சர்ச் மூலம் அறிகுறிகளுக்கான காரணங்களை சுய ஆய்வு செய்துகொள்கின்றனர்.
ஆனால், இது சிக்கலான முடிவுகளின் தீவிரத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் அவை கொடுக்கும் பதில்களால் ஒருவருக்கு மேலும் மனஅழுத்தம் அதிகரிக்கிறது. இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
ஏனெனில் இதுபோன்ற சர்ச் என்ஜின் அளிக்கும் பதில்கள் மிகவும் துல்லியமானவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, மருத்துவ விஷயங்களில். இதனால்தான் மருத்துவர்கள் சர்ச் என்ஜின் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் சுய ஆய்வு செய்ய வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள். ஆன்லைனில் நோய் குறித்து தேடும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
* மருத்துவர்கள் அல்லாமல் யார் வேண்டுமானாலும் மருத்துவம் சார்ந்த பதிவினை ஆன்லைனில் வெளியிடலாம்.
* ஆன்லைன் தேடலை உங்கள் தொடக்க புள்ளியாக பாருங்கள். அதனை இறுதி பதிலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. * சுகாதார கிளினிக்குகள், மருத்துவமனை வலைத்தளங்கள், புகழ்பெற்ற சுகாதார இதழ்கள் மற்றும் வெளியீடுகள் போன்ற நம்பகமான வலைத்தளங்களிலிருந்து தகவல்களைத் தேடுங்கள்.
* மருத்துவ நிபுணர்களிடமிருந்து ஆலோசனைப் பெறுவதை தாமதப்படுத்த வேண்டாம்
* உங்கள் பிரச்சனை குறித்து ஆன்லைன் ஆராய்ச்சி செய்யுங்கள். பின்னர் உங்கள் கேள்விகளை எழுதுங்கள், உங்கள் மருத்துவரை அல்லது உங்கள் அருகிலுள்ள ஒரு சுகாதார மையத்தை அழைத்து உங்களது எல்லா கேள்விகளுக்கும் பதிலை பெற்றுக்கொள்ளவுங்கள்.