கோலிசோடா படத்தில் வந்த நடிகை! தற்போதைய நிலை என்ன தெரியுமா?
கோலி சோடா படத்தில் எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை சீதா.
சென்னையை சேர்ந்த சீதா, வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர்.
கோலி சோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு மிக எதார்த்தமாக நடித்திருப்பார்.
படத்தின் வாய்ப்பு கிடைத்தது, நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது, “உன் மூஞ்ச எல்லாம் எப்படி செலக்ட் பண்ணாங்க“ என்றெல்லாம் கமெண்ட் அடித்துள்ளார்கள் அவரின் நண்பர்கள்.
ஆனாலும் அவருடைய அம்மா மட்டுமே பக்கபலமாக இருந்ததாகவும், பெரிய ஆளாக வருவ என தனக்கு சப்போர்ட் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முதன்முதலில் கோலி சோடா வாய்ப்பு வந்தபோது கூட யாரோ சும்மா நம்மை கேலி செய்கிறார்கள் என முதலில் எண்ணிய சீதா, பின்னர் உதவி இயக்குனர்க்ள எல்லாரும் பேசியபிறகு உண்மையாகவே ஒத்துக்கொண்டுள்ளார்.
கோலி சோடா 1.5 எனும் அதன் அடுத்த பகுதியில் இவர் நடித்துக்கொண்டிருக்கிறார். அங்கு போனாலே கவலையெல்லாம் மறந்துவிடும் ஜாலியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
10 எண்றதுக்குள்ள, மாயநதி போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.