துபாயில் விற்கப்படும் தங்க டீ: விலை எவ்வளவு தெரியுமா? கொந்தளித்த நெட்டிசன்கள்
துபாயில் இருக்கும் ஒரு கஃபேயில் டீயின் மேல் 24 காரட் தங்க இலைகளை மேலே வைத்து தூய வெள்ளி கோப்பைகளில் டீ பரிமாறப்படுகிறது. இதற்கு பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தங்க டீ
நாம் எல்லோரும் எப்போதும் ஒரு நாளைக்கு புத்துணர்ச்சியுடன் செயல்பட ஒரு கப் தேனீர் குடிப்பது வழக்கம். ஒரு டீ சாதாரணமாக 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் கூடினால் 500 ரூபாய் வரை விலைக்கு இருக்கலாம்.
ஆனால் துபாயில் ஒரு டீ 1 லட்சம் விற்கப்படுகின்றது. இதற்கு காரணம் இதன்மேல் தங்கள் இலைகள் வைக்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள டிஐஎஃப்சியின் எமிரேட்ஸ் பைனான்சியல் டவர்ஸில், போஹோ கஃபே விற்கப்படும் இந்த ‘தங்க கரக்’ டீயின் மேல் 24 காரட் தங்க இலைகளுடன் தூய வெள்ளி கோப்பைகளில் பரிமாறப்படுகிறது.
இந்த ஒரு டீ-யின் விலை இந்திய மதிப்பில் ரூ.1.14 லட்சம் ஆகும். இங்கு தங்கத்திலான காபி தண்ணீா என பல வகை இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதில் இருந்து இதற்கு பல இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த கருத்துக்கள் படியே “அது தங்கமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், எப்படியும் கடைசியில் கழிப்பறைக்கு தான் செல்லப் போகிறது” என்றும்,
“இது பணத்தை வீணடிக்கும் செயல்” என்றும், “சுத்த அபத்தம்; இதற்கு செலவு செய்தவருக்கு பணத்தின் மதிப்பு தெரியவில்லை” என்பது போன்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |