அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை: தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரமா? இதோ பதில்
தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ந்து அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வாய்ப்பினை இழந்து விட்டோமோ என்ற எண்ணத்தினை ஏற்படுத்தியது.
எனினும் இன்னும் தங்கத்தினை வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் தங்கம் விலையானது இன்னும் உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு கிட்டதட்ட 8,400 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது.
எனினும் கடந்த வாரத்தில் தங்கம் விலை நிலவரம் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வரும் வாரத்தில் தங்கம் விலை எப்படியிருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.
ஏற்கனவே பணவீக்கம் என்பது உச்சம் தொட்டு வரும் நிலையில், பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆபரணத் தங்கத்தின் வியோலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, 4534 ரூபாயாகவும், சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து, 36,272 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
10 கிராமுக்கு 45,340 ரூபாயாகவும் உள்ளது. இது இந்த வாரத் தொடக்கத்தில் சவரனுக்கு 35,776 ரூபாயாகவும் இருந்தது. இன்று 36,272 ரூபாயாக உள்ளது. இது ஒரு வாரத்தில் சவரனுக்கு 496 ரூபாய் அதிகரித்துள்ளது.
இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 4944 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,440 ரூபாயாகவும், கிலோவுக்கு 49,440 ரூபாயாகவும் உள்ளது. இது இந்த வாரத் தொடக்கத்தில் 48,790 ரூபாயாகவும் உள்ளது. ஒரே வாரத்தில் 650 ரூபாய் அதிகரித்து காணப்படுகின்றது.
இன்று ஆபரண வெள்ளியின் விலையானது மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 65.50 ரூபாயாக உள்ளது. இதே 10 கிராமுக்கு 655 ரூபாயாகவும், கிலோவுக்கு 65,500 ரூபாயாகவும் உள்ளது. இது நடப்பு வாரத் தொடக்கத்தில் 64,300 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரே வாரத்தில் கிலோவுக்கு 1200 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் நாளை தொடக்கத்தினை பொறுத்தே இருக்கும். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இதே ஆபரணம் தங்கம் மற்றும் வெள்ளியினை தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.