அதிரடியாக சரிந்த தங்கம் விலை - எப்படி பார்த்து வாங்கவேண்டும்?
தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், கடந்த வாரம் தங்கம் விலை சற்று அதிகமாகவே இருந்தது.
கடந்த நாட்களில் அதிகரித்தாலும், கடந்த 3 நாட்களில் சற்று குறைந்து வந்தது. தற்போது மீண்டும் குறைந்து ரூ.38,440-க்கு விற்றது.
இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38,160-க்கு விற்பனையாகிறது.
கடந்த நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,805-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.4,770-க்கு விற்கப்படுகிறது.
இதேப்போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கடந்த நாளில் வெள்ளி ஒரு கிராம் ரூ.60.70-க்கு விற்கப்பட்டது.
இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.60-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
