தொடர்ந்து மிகப்பெரிய சரிவை சந்தித்த தங்கம் விலை - எவ்வளவு குறைவு தெரியுமா?
தங்கம் விலை அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டும் வரும்.. இறக்கம் கண்டு வரும் நிலையில் மக்கள் வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.
அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் ரூ.10 குறைந்து 4 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று, வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 பைசா உயர்ந்து ரூ.62.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.62,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.