Today Gold Rate: குறைந்த வேகத்தில் எகிறிய தங்கத்தின் விலை! சவரனுக்கு ரூ.1,080 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை சமீபத்தில் சற்று குறைந்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 1,080 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ 11,075 ஆகவும் சவரன், ரூ.88,600 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 அதிகரித்து, 11,220 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 1,080 அதிகரித்து, 89,680 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

கடந்த வருடங்களில் 70 ஆயிரத்திற்கும் குறைவாக விற்கப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது 89 ஆயிரத்தை தாண்டி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.166.00ஆகவும், கிலோவிற்கு ரூ.1,66,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் தங்கம் விலை
இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,43,920, அதுவே கிராமிற்கு ரூ.42,990க்கு விற்கப்படுகின்றது.

மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,15,280க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 39,410க்கு விற்கப்படுகின்றது.  
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 455.99 LKR என்றும் ஒரு அவுன்ஸ 14,761 LKR என்று விற்பனை ஆகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        