Today Gold Price: தங்கம் வாங்கப் போறீங்களா? இன்று வாங்குவதற்கு சரியான நேரமாம்
ஆபரணத் தங்கத்தின் விலை சமீப நாட்களாக தாறுமாறாக அதிகரித்த நிலையில், இன்று எந்தவொரு மாற்றம் ஏற்படாமல் நேற்றைய விலைக்கே விற்கப்பட்டு வருகின்றது.
இன்றைய தங்கம் விலை
ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து சில தினங்களாக அதிகரித்துவரும் நிலையில், இன்று சவரனுக்கு எந்தவொரு மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்கப்படுகின்றது.
நேற்றைய தினத்தில் கிராம் ரூ. 13,600 ஆகவும், சவரன், ரூ.1,08,800 ஆகவும் இருந்து வந்தது. இன்றும் கிராமுக்கு 13,600 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 1,08,800 ஆகவும் விற்கப்படுவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் தங்கத்தின் விலை, அடுத்து வரும் நாட்களில் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
இதே போன்று வெள்ளியின் விலையிலும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. கிராமுக்கு ரூ.255.00 ஆகவும், கிலோவிற்கு ரூ.2,55,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் தங்கம்விலை
இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,88,160 அதுவே கிராமிற்கு ரூ.48,520க்கு விற்கப்படுகின்றது.
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,37,280க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 42,160க்கு விற்கப்படுகின்றது.
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 604.47 LKR என்றும் ஒரு அவுன்ஸ 18,801.01 LKR என்று விற்பனை ஆகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |