மீண்டும் அதிரடி சரிவை சந்தித்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலையான கடந்த சில நாட்களாகவே சரிவை சந்தித்து வந்த நிலையில் நேற்றைய தினத்தில் திடீரென விலை ஏறியது.
ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதனைத் தொடர்ந்து நேற்று கிராமுக்கு ரூ.42-ம், பவுனுக்கு ரூ.336-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 413-க்கும், ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 304-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து ரூ. 35 ஆயிரத்து 104 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 25 குறைந்து ரூ.4,388 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து 64 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிலோ வெள்ளி 64,800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.