சரிந்தது தங்கம் விலை.... வாங்க சரியான நேரம் எது? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்!
தொடர்ந்து தங்கம் விலை ஏற்றத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது குறைய தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியான பின்பு டாலர் மதிப்பில் ஏற்பட்டு உள்ள மாற்றங்களைக் கடந்தும் தங்கம் விலை கணிசமான சரிவை பதிவு செய்துள்ளது நல்ல விஷயம் தான்.
மேலும், செப்டம்பர் 15ஆம் தேதி தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்து கணிசமான சரிவை மட்டுமே பதிவு செய்துள்ளது. ஆனால் வெள்ளி விலை பெரிய அளவிலான சரிவைப் பதிவு செய்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Rate) கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து ரூ. 4,430-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 176 குறைந்து ரூ. 35,440.00-க்கு விற்பனையில் உள்ளது.
24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 4,794 -க்கும் ஒரு சவரன் ரூ. 38,352-க்கும் விற்பனையில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ. 67.80-க்கும் ஒரு கிலோ ரூ. 67,800-க்கும் விற்பனையாகிறது.
தேசிய அளவில் டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 46,450 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 50,670 ஆகவும் உள்ளது.
கொல்கத்தாவில் 22 கேரட் 10 கிராம் தங்கம் 46,750 ரூபாய்க்கும் 24 கேரட் 10 கிராம் தங்கம் 49,250 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.