இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை.... இப்போதாவது தங்கம் வாங்கலாமா? மகிழ்ச்சியில் மக்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலையில் அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டு விற்பனையாகி வந்தது.
அதன் பின்னர் தொடர்ந்து தங்கம் விலை உயர்வையே நோக்கி செல்ல தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு உயர்த்தப்பட்டு வந்தது.
இதனால் நகை வாங்குவோர் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில், தற்போது காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,838 ஆக இருந்தது.
மாலையில் அது 4,469 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, இன்று காலை 35,792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் 40 ரூபாய் குறைந்து 35,752 ரூபாய்க்கு வந்துள்ளது.
ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 35792.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.68.70 ஆக இருந்தது. மாலையில் அது ரூ.68.90 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 68,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.