தங்கம் விலையில் அடுத்த மாற்றம்! முடிஞ்ச சீக்கிரமா வாங்கிடுங்க.. இன்றைய விலை விபரம்
தங்கம் விலை அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டும் வரும் நிலையில், நேற்றுதான் சவரனுக்கு 16 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, இன்றும் விலையேற்றம் நீடிக்கிறது. இதனால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,369 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 34,952-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் தங்கம் விலை மேலும், சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,733 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 37,864 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ. 600 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 64.70 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.64,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது.