குருபகவானை விரதம் இருந்து இப்படி வழிப்பட்டால் ஏற்படும் சகல நன்மைகள் என்னென்ன?
குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். குருவை நாம் விரதம் இருந்து வழிபட்டுக் கொண்டே இருந்தால், அவர் பல நன்மைகளையும் நமக்கு வழங்குவார். குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் விரதம் இருந்து அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானை தரிசித்து வரலாம்.
மேலும், வியாழக்கிழமையில் விரதம் இருந்து நீராடி, மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர்களும் கொண்டு அர்ச்சனை, அலங்காரம் செய்ய வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.
அதன் பின்னர் அந்த நைவேத்தியப் பொருட்களை மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம்.