காலையில் சாப்பிட சிறந்த உணவு கோவா ஸ்பெஷல் கோன் இட்லி!
பொதுவாகவே காலை உணவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. பெரும்பலானோர் வீட்டில் காலை உணவுக்கு ஏற்றது இட்லி மற்றும் சட்னிதான். தயாரிக்கவும் எளிது.
இட்லியானது அரிசி, உளுந்து ஊற வைத்து, மாவாக அரைத்து பிறகு இட்லி செய்வது வழக்கம். ஆனால் நீங்கள் இன்று புதுவகையான இட்லியை செய்து பார்ப்போம்.
கோவா ஸ்பெஷல் கோன் இட்லியை உங்கள் உணவு வேளையில் சேர்த்துக் கொள்வீர்கள்.
தேவையான பொருட்கள்
- பாஸ்மதி அரிசி அல்லது சாதாரண அரிசி – 2 கப்
- சர்க்கரை- 3 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 3/4 கப்
- தேங்காய் பால் - 3/4 கப்
- உப்பு, தண்ணீர் – தேவையான அளவு
- உலர் ஈஸ்ட் – 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் இரண்டு கிண்ணங்களில் அரிசி மற்றும் உளுந்தப்பருப்பை சுமார் 4-5 மணி நேரத்திற்கு ஊற வைத்து, அரசி, பருப்பு இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவிற்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
பெரிய கிண்ணத்தில் தேங்காய் பாலுடன் அரிசி மாவையும், பருப்பு மாவையும் ஊற்றி மாவை கலக்கிக்கொள்ள வேண்டும்.
அதனுடன் உப்பு, 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து, மாவை தனியாக வைக்கவும்.
சிறிய கிண்ணத்தில் ஈஸ்ட், 1 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் 1/4 கப் வெதுவெதுப்பான நீரை கலந்து தனியாக வைக்கவும்.
இந்தக் கலவையை மாவுடன் சேர்ந்து சுமார் 2-3 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் இந்த வெந்தவுடன், வழக்கம் போல இட்லி சட்டியில் மாவை ஊற்றி சுமார் 20 நிமிடங்கள் மாவை ஆவியில் வேகவைக்க வேண்டும்.
வெந்தவுடன் எடுத்து பரிமாறினால் சுவையான தேங்காய் பால் அதாவது கோன் இட்லி ரெடியாகிவிட்டது.
இதனுடன் சட்னி,சாம்பார், சிக்கன் குழம்பு வைத்து சாப்பிடும் போது இன்னும் அதிக சுவையாக இருக்கும்.