புது காதலனுடன் சேர்ந்து பழைய காதலனை கொலை செய்த காதலி!
தினம் தினம் உலகில் எவ்வளவோ குற்றச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு நிகழ்வுகளும் இதை விட அது பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு கொடூரமாக இருக்கின்றது.
சில வேளைகளில் இப்படியும் பண்ண முடியுமா? என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கும்.
அவ்வாறான ஒரு சம்பவம் மேற்கு வங்காளத்தின் துர்காப்பூர் மாவட்டத்தில் கோபால்மத் நகரில் நடந்துள்ளது.
அவினாஷ் - ஆப்ரீன் கட்டூன் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரது காதலும் தகராறில் முடிந்திருக்கிறது.
அதன் பின்னர் ஆப்ரீன் கட்டூனுக்கு பிட்டு குமார் சிங் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இது தெரியாத அவினாஷ், ஆப்ரீனை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.
புது காதலனைக் கண்டதும் பழைய காதலனிடமிருந்து தள்ளியிருக்க விரும்பியுள்ளார் ஆப்ரீன். இதனால் ஆப்ரீனின் பழைய காதலரை கொலை செய்ய ஆப்ரீனும் பிட்டுவும் திட்டம் தீட்டியுள்ளனர்.
இதன்படி பிட்டு வீட்டில் விருந்து ஏற்பாடு செய்து அதில் அவினாஷை கலந்துகொள்ள செய்து மதுபானம் ஊற்றி கொடுத்துள்ளனர். இதில் அவனாஷூக்கு போதை ஏறியதும் இரும்பு தடியால் தலையில் அடித்துள்ளனர்.
இதில் மயங்கி விழுந்த அவினாஷின் தலையில் போத்தல் ஒன்றை எடுத்து அடித்துள்ளார் பிட்டு. இதில் அவினாஷ் உயிரிழந்ததும் இருவரும் சேர்ந்து அவரது கைகளை கட்டி, இரு சக்கர வாகனத்தில் உடலை ஏற்றி சென்று பிரதான நெடுஞ்சாலையில் வீசியுள்ளனர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. ஆப்ரீன் மற்றும் பிட்டுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.