காதலன் முகத்தில் ஆசீட் வீசி துடிக்க துடிக்க கொலை செய்த காதலி... விசாரணையில் பகீர் காரணம்
ஆக்ராவில் இளம் பெண் ஒருவர் தன் காதலன் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வசித்துவருபவர் சோனம்பாண்டே (25).
இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திர குமார் என்பவரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார், சோனம் பாண்டே ஒரு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த நிலையில் இந்த மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு ஆய்வகத்தில் தேவேந்திரகுமார் பணியாற்றி வந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் தேவேந்திரகுமார் சோனத்தைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியிருந்த நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
இதையறிந்த கோபமடைந்த சோனம் தன் காதலனை தன் வீட்டிற்கு வரக்கோரி அவரது முகத்தில் ஆசிட் வீசியுள்ளார். இதில் பலத்தை காயமடைந்த தேவேந்திர்குமார் சத்தமிட்டுத் துடித்துக் கீழே சரிந்து விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு அறுவைச் சிகிச்சை அளித்து அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டதையடுத்து பொலிசார் சோனத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.