கட்டுக்கட்டாக பணத்தை பார்த்த பெண் காதலனை கழற்றிவிட்ட பெண்! ட்ரெண்டிங் காட்சி
பெண் ஒருவர் காதலனிடம் இருந்த கட்டு கட்டான பணத்தினை அவதானித்து காதலை உதறிவிட்டு சென்றுள்ள அதிர்ச்சி காட்சியை இங்கு காணலாம்.
உலகில் காதலுக்காக உயிரை கொடுக்கும் நபர்கள் இருந்தாலும், பணத்திற்காக காதலை உதறிவிட்டு செல்பவர்களுககும் இருக்கவே செய்கின்றனர்.
பூங்காவில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணிடம், ஒரு இளைஞர்,' நீங்கள் காதலிக்கும் நபருடன் காதலை முறித்துக்கொண்டால், நான் உங்களுக்கு பணம் தருகிறேன்' என கூறுகிறார்.
இதற்கு குறித்த பெண் பணத்திற்காக ஐந்து வருட காதலை விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறிய நிலையில், முதலில் இண்டாயிரம் பணக்கட்டை கையில் எடுத்து வைத்துள்ளார்.
இதனை அவதானித்த பெண் பணத்தை எடுக்க மறுக்கவே அடுத்தடுத்து, பணக்கட்டுகளை கையில் எடுத்து வைக்கின்றார். ஒருகட்டத்தில், பணமா, காதலா என்ற கேள்வி மீண்டும் வந்தபோது, அந்த பெண், பணம் என பதிலளித்தார்.
வாழ்வில் ஒரு கட்டத்திற்கு மேல் செல்லும் போது நமது கையில் நிச்சயம் பணம் இருக்க வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக தெரிந்து கொண்டுள்ள இந்த காலத்தில், குறித்த பெண்ணும் இறுதியில் தனது மனதை பணத்திற்கு பக்கம் திருப்பியுள்ளார்.