இஞ்சியில் உப்பு தூவி சாப்பிடுங்க... உடலில் மிகப்பெரிய மாற்றத்தை காண்பீங்க
இஞ்சியுடன் சிறிதளது உப்பு சேர்த்து உணவிற்கு முன்பு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக நாம் உண்ணும் உணவின் மூலமாகவே உடம்பிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றது. சத்துக்கள் சரியாக கிடைக்க ஜீரணம் சரியான முறையில் நடைபெற வேண்டும்.
வயிறு உப்பிசம், வாயு தொல்லை இல்லாமல் வைத்திருப்பது அவசியம். குடல் ஆரோக்கியம் தான் நமது மூளையின் செயல்பாட்டில் நேரடி தொடர்பு கொண்டதாகும்.
ஆகவே நல்ல ஜீரண சக்தி இருப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சில பொருட்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜீரணத்தை மேம்படுத்த
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு மூன்று வேளையும் சிறிய இஞ்சியுடன் சிட்டிகை உப்பைத் தூவி சாப்பிட்டால் மிகப்பெரிய ஆரோக்கிய மாற்றத்தை காணலாம். மேலும் ஜீரண செயல்பாடும் மிகச்சிறப்பாகவே நடக்கும். இவை எச்சில் மூலமாக என்சைம் மற்றும் அமிலத்தை தூண்டி ஜீரணத்தை அதிகரிக்கும்.
நெல்லிக்காயுடன் புதினா சேர்த்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், கொழுப்பையும் எரிக்கின்றது. மேலும் கொழுப்பு உணவின் ஜீரணத்தையும் துரிதப்படுத்துகின்றது.

சீரகம் மற்று் சோம்பு இவற்றினை கொதிக்க வைத்து தண்ணடீரை பருகினால், ஜீரண சக்தி மேம்படுவதுடன், கணையத்தில் என்சைம்கள் சரியாக வெளியாகி, வயிறு உப்புசம் மற்றும் வாயு தொல்லையும் நீங்கும்.
இஞ்சியை பச்சையாக அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும். நெல்லிக்காய் சட்னியையும் வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது.
ஆனால் வயிறு உப்புசம், ஜீரண கோளாறு, வாயு தொல்லை, அல்சர் இவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இஞ்சியை எடுக்கும் முன்பு கவனமாக எடுக்கவும்.
இதய நோயாளிகள் ரத்தத்தினை மெலிவாக்க மருந்து எடுத்துக்கொள்பவர்கள் இவற்றினை தவிர்க்க வேண்டும். மேலும் கர்ப்பிணிகள் அளவோடு இஞ்சியை எடுத்துக் கொள்ளவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |