ஆண்ளே இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரே ஒரு பொருள் தான் தீர்வு!
இன்று பல ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று விந்தணு குறைப்பாடு.
உங்கள் வீட்டு சமையல்கட்டில் ஒளிந்திருக்கும் பழம்பெரும் மருத்துவர் இந்த இஞ்சி. இந்த ஒரு பொருள் போாதும் ஆண்களின் பல பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்பதற்கு.
விந்தணு பிரச்சினைக்கு மட்டும் இல்லை, எடை குறைப்பு, சளி, காய்ச்சல் உட்பட எண்ணற்ற நோய்களுக்கு மூலிகை மருந்தாக பயன்படுகிறது இஞ்சி.
இதை சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஏற்படும் ஐந்து நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

எடை குறைப்பு
இஞ்சி உடலை சூடுபடுத்தவும் தெர்மோஜெனீசீஸை தூண்டி உங்களின் கொழுப்பை குறைக்க உதவுகிறது.மேலும், குடற்புண்களை நீக்குதல், வயிறு நிரம்பிய உணர்வை போக்குதல் போன்றவற்றை செய்கிறது.
அதே போல், இரவு நேரங்கள் அல்லது உணவு நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பசி ஏற்படும் போது இஞ்சி சேர்த்த தேனீரை பருகுங்கள். இது அதிகமான கலோரிகள் இன்றி உங்களின் பசியை போக்கி விடும்.
ஆண்மை அதிகரிப்பு
ஆண்மையை அதிகரிக்க இஞ்சி உதவுகிறது. ஆண்களின் ஆண்மை வீரியத்தை அதிகரித்து , விந்தணு குறைப்பாட்டினை தீர்த்து வைக்க இஞ்சி மிக சிறந்த தீர்வு.
வலி நிவாரணி
இஞ்சியில் இருக்கக்கூடிய அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வலி நிவாரணி காரணிகள் உங்கள் உடம்பில் தசைப் பிடிப்பு உட்பட பிற பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வலி போன்றவற்றை போக்க உதவுகிறது.
தொடர்ந்து உங்களது உணவு முறையில் நீங்கள் இஞ்சி உட்கொண்டு வரும்போது உங்கள் வலி குறைவதை நீங்கள் பார்க்க முடியும். மேலும் நீங்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்யக்கூடிய நபராக இருந்தால் உங்களுக்கு தசைப் பிடிப்பு, கை கால் வலி போன்றவை ஏற்படலாம்.
எனவே, நீங்கள் அன்றாடம் உணவில் இஞ்சி அல்லது இஞ்சி கலந்த தேநீர் உள்ளிட்டவற்றை அருந்தும் போது இது போன்ற வலிகளில் இருந்து விடுபடலாம்.

சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றும்
இஞ்சியில் உள்ள பண்புகள் உங்களின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவலாம்.
இது வெறும் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறிகள் இருந்தால் கூட அது வருவதற்கு முன்பே அதை கட்டுப்படுத்துவதற்கான பண்புகள் இஞ்சியில் உள்ளன.
மேலும் இதயம் சார்ந்த நோய்கள் உங்களை தாக்காமல் அதன் அபாயத்திலிருந்து உங்களை காப்பதற்கான அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது.
வாதப்பிரச்சினைகள்
உங்கள் மூட்டுகளில் ஏற்படும் வலிகளை போக்குவதற்கும் கீழ்வாதத்தால் ஏற்படும் கை கால் மூட்டு வலிகளை குறைப்பதற்கும் இஞ்சியில் உள்ள பண்புகள் உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இத்தனை அம்சங்கள் இருப்பினும் இஞ்சியை நீங்கள் உங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட அளவு தான் பயன்படுத்த வேண்டும்.