சூயஸ் கால்வாயில் முடங்கிய ராட்சத கப்பல்... தற்போது மிதக்கத் தொடங்கியது
சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகன் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் சூயஸ் கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) முதல் எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்குக் கப்பல் தரைதட்டி நின்றது.
ஞாயிறு வரை 18 மீட்டர் ஆழத்தில், 27,000 கியூபிக் மீட்டர் அளவு மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது என்று சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்திருந்தது. எவர் கிவன் கப்பலுக்கு அடியில் பெரும் அளவில் பாறைகள் இருந்ததாக சூயஸ் கால்வாய் ஆணைய அதிகாரிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து சூயஸ் கால்வாயில் எவர் கீரின் கப்பல் மிதக்கத் தொடங்கியுள்ளது.
இதனை எகிப்து அரசு உறுதிப்படுத்தியுள்ளது. கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து சூயஸ் கால்வாயின் இரு முனைகளில் நிற்கும் சரக்குக் கப்பல்கள் விரைவில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.