வானில் தோன்றிய மர்ம மேகங்கள்: ஏலியன்களின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் மக்கள்!
துருக்கியில் நேற்று திடீரென வானில் மர்மமாக ஒரு மாற்றம் தோன்றியுள்ளது.
மர்ம மேகங்கள்
துருக்கியில் வியாழக்கிழமை காலை வானில் வித்தியாசமான வடிவில் வானில் மேகக்கூட்டம் தோன்றியிருக்கின்றது. இந்த மேகங்கள் லெண்டிகுலர் மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பயங்கரமான ராட்சத மேகம் ஆரஞ்சு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு நிறமாக மாறியது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தற்போது துருக்கியின் பர்சா நகரில் தோன்றிய இந்த மேகம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
ஏலியன்களின் வாகனமா?
வானில் வட்டமாக நகர்ந்த இந்த மேகம் ஏலியன்களின் வாகனம் என பலரும் பதிவிட்டுள்ளனர்.
லெண்டிகுலர் மேகங்கள் பொதுவாக வளைந்த, சாஸர் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும்.
துருக்கியில் சூரிய உதயத்தின் போது தோன்றிய மேகம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வானில் தெரிந்தது. இந்த மேகங்கள் பூமியில் இருந்து 2,000 - 5,000 மீட்டர் உயரத்தில் தோன்றியிருகின்றனது.
Turkey's Bursa region witnessed an incredible cloud formation… pic.twitter.com/wOWnRTETHp
— Tansu YEĞEN (@TansuYegen) January 20, 2023