நள்ளிரவில் பிக்பாஸ் வீட்டில் நடந்த கூத்து! பதறி ஓடிய இலங்கை பெண்....கதறி துடித்த தனலட்சுமி - உடம்பில் ஆவியா?
பிக் பாஸ் வீட்டில் ஆவி இருப்பதாக அமுதவாணன் பரபரப்பை கிளப்பி பெண் போட்டியாளர்களை அலறவிட்ட ருசிகர சம்பம் நிகழ்ச்சியில் நடந்தது.
நேற்றிரவு சிறையில் இருக்கும் போட்டியாளர்களிடம் அமுதவாணன் ஒரு திகில் கதையை கூறினார்.
அனைவரும் தைரியமாக கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அப்போது மணிகண்டன் பாத்ரூம் போய்விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார்.
உடனே மைனாவும், மணிகண்டன் பின்னால் சென்று அவரை பயமுறுத்த போகிறேன் என செல்கின்றார்கள்.
ரெஸ்ட் ரூமில் நடக்கும் காமெடியை பார்க்க அமுது, ஜனனி,ஷிவின் அனைவரும் வந்தனர்.
ஆனால், பாத்ரூமுக்குள் வந்ததும் அமுதுவாணன் பேய் பிடித்தது போல அனைவரையும் பயமுறுத்தி விட்டு மயங்கி விழுந்து விட்டார். இதனால், அருகில் இருந்த ஜனனியும் தனலட்சுமியும் பயந்து ஓடினார்கள்.
சக போட்டியாளர்கள் பிராங்க் பண்ணது போதும் என்று எவ்வளவோ சொல்லியும் அமுதவாணன் தொடர்ந்து உடம்பிற்குள் ஆவி புகுந்தது போல ஏதோ ஒருமாதிரி ஆலைந்துக்கொண்டே இருந்தார்.
அலண்டு ஓடிய போட்டியாளர்கள்
அமுதவாணனின் செயலைப் பார்த்து பயந்துப்போன தனலட்சுமி, நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கதறி அழுதுக்கொண்டு ஓடி மெயின் டோர் அருகே சென்று கதறினார்.
உடனே வீட்டில் இருந்த அனைவரும் அவரை சமாதானப்படுத்தினர்கள். பிறகு அமுதவாணன் சும்மா விளையாட்டுக்கு செய்ததாக தனலட்சுமியிடம் உண்மையை ஒப்பு கொள்ளுகின்றார்.
பார்க்கலாம் இந்த நகைச்சுவை காட்சியை நடிகர் கமல் குறும்படம் போட்டு காட்டுவாரா என்று.