விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது? இப்போ என்ன வேலை செய்றாங்கனு தெரியுமா?
கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த பிரபல நடிகை தற்போது என்ன தொழில் செய்கின்றார் என்பதை காணொளியில் தெரிந்து கொள்வோம்.
கில்லி
நடிகர் விஜய்யின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று கில்லி. 20 வருடங்களுக்கு முன்பு வெளியான இப்படம் தற்போது வரை ரசிகர்களுக்கு பிடித்த படமாகவே இருக்கின்றது. இப்படத்தை கடந்த வருடம் ரீரிலீஸ் செய்து இருந்த நிலையில், அப்பொழுதும் வசூலை வாரிக் குவித்தது.
இப்படத்தில் விஜய்யின் காமெடி, அவரது ஆக்ஷன் அனைத்தும் வெறித்தனமாகவே இருந்தது. ரசிகர்கள் பலரும் தற்போது கூட எந்தவொரு கூட்டத்திலும் நான் கில்லிடா என்ற வசனத்தை உச்சரிக்காமல் இருப்பதில்லை.
விஜய்யின் தங்கை
இந்நிலையில் இப்படத்தில் விஜய்யின் தங்கையாக புவனா கதாபாத்திரத்தில் நடிகை ஜெனிபர் நடித்திருப்பார். இவர் கில்லி படம் மட்டுமின்றி நேருக்கு நேர் உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
சமீப காலமாக படவாய்ப்பு சரியாக கிடைக்காத நிலையில், தற்போது சொந்த தொழிலில் இறங்கியுள்ளார். மேலும் அந்த தொழிலை மிகவும் சிறப்பாகவும் செய்து வருகின்றார்.
இவர் செய்யும் சொந்த தொழில் என்னவெனில் இயற்கை முறையில் சோப்புகள் தயாரித்து விற்பனை செய்வதாகும். இக்காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |