வீட்டில் கடன் தொல்லை நீங்கி நல்ல செய்தி வர வேண்டுமா?
அமாவாசை நாள் என்பது சந்திரன் முழுமையாக தேய்வடைந்து இருளில் மூழ்கி காணப்படும் நாளாக பார்க்கப்படுகின்றது. முக்கியமான பரிகாரங்கள் செய்வதற்கு மிக உகந்த நாளாக இருப்பது இந்த அமாவாசை நாள் தான்.
நமது மன்னோர்கள் இந்த அமாவாசை நாளன்று விரதம் இருப்பது, தர்ப்பணம் கொடுப்பது போன்ற விஷயங்களை மேற்கொள்வார்கள்.
அதிலும் ஞாயிற்று கிழமை அமாவாசை என்றால் அது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஞாயிற்றுக்கிழமை அமாவாசையில் நாம் சில பரிகாரங்களை மேற்கொண்டால் சூரிய பகவானின் அருள் கிடைத்து நல்ல செய்தி வரும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் அமாவாசை நாளன்று கடன் தீருவதற்காக என்ன பரிகாரம் செய்யதால் பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அமாவாசை பரிகாரம்
நம்முடைய வாழ்க்ககையில் பிரச்சனை என்பது நாம் செய்த கர்மவினையின் அடிப்படையில் தான் வருகிறது. பிரச்சனை என்று ஒன்று இருந்தால் இதற்கான பரிகாரம் என்பது கட்டாயமாக இருக்கும்.
இதை சரிவர செய்தால் வாழ்க்கையில் பிரச்சனைகள் குறைந்து சந்தோஷமான வாழ்க்கையை நோக்கி செல்லலாம்.
அந்த வகையில் கடன் பிரச்சனைகள் வந்தால் அதிலிருந்து மீள வேண்டும் என்றால் மற்றும் நல்ல செய்தி உங்கள் வீடு தேடி வர வேண்டும் என்றால் பித்ரு தோஷம், பித்ரு சாபம் உங்களை விட்டு நீங்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை நீங்கள் அமாவாசையில் செய்தால் மிகவும் நல்லது. அமாவாசையன்று நமது முன்னோர்களில் ஒருவரை வணங்கி விட்டு வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வெல்லத்தை ஒரு தட்டில் வைத்து வீட்டில் உள்ள அம்மன் படம் அல்லது குலதெய்வத்தின் படத்திற்கு முன் வைக்க வேண்டும்.
பிறகு அந்த வெல்லத்தை உங்களின் வலது உள்ளங்கையில் எடுத்து வைத்து, கண்களை மூடி உங்களின் வேண்டுதல் எதுவோ அதை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.
பின் அந்த வெல்லத்தை எடுத்துக் கொண்டு வீட்டின் நிலை வாசலுக்கு வெளியே சென்று, அந்த வெல்லத்தை பொடியாக ஆக்கி, வீட்டின் வெளிப்புறம், நிலைவாசலுக்கு அருகில் தூவி விடுங்கள்.
இப்படி நீங்கள் தூவி விடும் வெல்லத்தை சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான எறும்புகள் வந்து எடுத்துச் செல்லும். இது நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு அன்னதானம் அளித்த பலனை உங்களுக்கு பெற்றுத் தரும்.
இதனால் உங்களின் கர்மவினைகள் நீங்கி, பல அற்புதமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். பித்ருக்களின் ஆசிகளும் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |