53 வயதிலும் மூச்சடைக்க அந்தரத்தில் தொங்கும் பிரபலம்! அதிர்ந்து போன இளம் நடிகர்கள்
ஐம்பது வயதை தாண்டிய நிலையில் முன்னாள் திரைப்பட நடிகை மது அவர்கள் ஹெலி வொர்கவுட் செய்யும் காட்சி இளம் நடிகைகளை ஓட விட்டுள்ளது.
சினிமாவிற்குள் எப்படி வந்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவில்,“ அழகன் ” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை மது.
இவர் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் ஸ்டாராக நடித்து வந்தார். இவருக்கான இடத்தை பிரபல இயக்குநர் மணிரத்னம் அவர்கள் எடுத்து கொடுத்தார்.
இவர் இந்தி தெலுங்கு என பிஸியாக இருந்ததால் பெரியளவில் தமிழ் வாய்ப்புகள் வராமல் இருந்தார். தற்போது 53 வயதை தாண்டிய நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
இவரின் நடிப்பிற்கு 90களிலும் பல கோடி ரசிகர் இருந்த நிலையில், தற்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ஹெவி வொர்கவுட்டில் ஐம்பது வயது நடிகை
இவர் டுவிட்டரை விட இன்ஸ்டா பக்கத்தில் தான் அதிகம் ஆர்வமாக இருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் ஹெவி வொர்கவுட் செய்யும் வீடியோக்காட்சி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்க்கும் ஐம்பது வயதை கடந்த நிலையிலும் இவர் இவ்வளவு ஆக்டிவாக இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், “இளம் நடிகர்கள் இதை பார்த்தால் ஒடி விடுவார்கள்” என கமண்ட் செய்து வருகிறார்கள்.