பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது.
இன்று ஞாயிற்றுகிழமை சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் அமையும். இதற்கமைய சிலரின் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும்.
இதன்படி, கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு, இன்றைய தினம் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வெற்றியின் நேரத்தை உறுதியளிக்கிறது. அத்துடன் அவர்களுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு சிறந்த நேரமாக இது பார்க்கப்படுகின்றது.
அதே போன்று புதிதாக தொழில் துவங்குபவர்கள் தெய்வங்களுக்குரிய இன்றைய தினம் நல்ல நாளாக அமையும். இதனால் வீட்டில் செல்வமும் பெருகும்.
அந்த வகையில் இன்றைய தினம் 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை பற்றி பார்ப்போம்.
![Daily Rasipalan: கன்னி ராசியினர் இதில் கவனம் தேவை.. பொறுப்புகளுக்கு தயாராகும் 3 ராசிகள்- உங்க ராசி என்ன? | Gemini Horoscope Today 8Th Dec 2024 Daily Rasipalan: கன்னி ராசியினர் இதில் கவனம் தேவை.. பொறுப்புகளுக்கு தயாராகும் 3 ராசிகள்- உங்க ராசி என்ன? | Gemini Horoscope Today 8Th Dec 2024](https://cdn.ibcstack.com/article/5a898d9d-9000-426a-a8e6-c1e8d3586a0d/24-67550bded6242.webp)
மேஷ ராசி
| - தாய்மாமன் முறையில் நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.
-
சில காரியங்களில் சிறு தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-
சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எனவே பணம் விடயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
-
வாழ்க்கைத்துணை வழியில் சில சமயங்களில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
-
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வழியில் ஆதாயம் கிடைக்கலாம்.
|
ரிஷபம் ராசி
| - காரியங்களில் அனுகூலம் கிடைக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
-
தாய்வழியில் ஏதாவது உதவிகள் கிடைக்கலாம்.
-
சிலருக்கு பல நாட்களாக வராத பணம் வரலாம்.
-
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
-
விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.
|
மிதுனம் ராசி
| - மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும்.
-
தொடங்கும் புதிய தொழில் சாதகமான பலன் கிடைக்கும்.
-
நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
-
சிலர் உங்களுக்கு எதிராக சில தொல்லைகள் தரலாம். இந்த காலப்பகுதியில் அது நீங்க வாய்ப்பு உள்ளது.
-
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
|
கடகம் ராசி
| - புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.
சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகள் அதிகரிக்கலாம்.
-
ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
-
வயிறு தொடர்பான பிரச்சினையில் இருப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
-
உணவு விடயத்தில் மாத்திரம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
-
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்வது கவனம்.
|
சிம்மம் ராசி
| - எதிர்பார்க்கும் காரியங்கள் நடந்து முடிய கொஞ்சம் நேரம் எடுக்கும்.
-
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
-
தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
-
வியாபாரத்தில் சக வியாபாரிகளால் இடையூறுகள் வரலாம்.
-
நரசிம்மரை வழிபட இருந்த இடையூறுகள் விலகும்.
|
கன்னி ராசி
| - இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.
-
புதிய முயற்சிகள் செய்து வேலை செய்ய வாய்ப்பு வரும்.
-
நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
-
கணவன்- உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.
-
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.
|
துலாம் ராசி
| - மனதில் தன்னம்பிக்கை உள்ளவர்களாக பார்க்கப்படுவீர்கள்.
-
நீங்கள் செய்யும் காரியங்களில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள்.
-
வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
-
வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும்.
-
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
|
விருச்சிகம் ராசி
| - வழக்கமான பணிகளில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.
-
கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு நீங்கி பழைய வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.
-
வியாபாரம் எப்போதும் போல் நல்ல வருமானம் கிடைக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு முருகப் பெருமாளின் அருள் இருக்கும்.
-
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
-
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்றைய தினம் பண விவாகரம் கவனமாக இருக்க வேண்டும்.
|
தனுசு ராசி
| - மனதில் இனம் புரியாத புதிய குழப்பங்கள் ஏற்படும்.
பழைய முயற்சிகளை கைவிட்டு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
-
வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
-
உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
-
வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
- தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளும் நீக்கும்.
|
மகரம் ராசி
| - மனதில் புதுவிதமான தைரியம் கிடைக்கும்.
தந்தை வழி உறவினர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும்.
-
சிலருக்கு எதிர்பார்த்த பணவரவு வீடு வந்து சேரும்.
-
இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
-
சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் பணம் கிடைக்கலாம்.
|
கும்பம் ராசி
| - எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
-
அரசாங்க காரியங்கள் கைக்கூடும்.
எதிரிகளால் பிரச்சனை ஏற்படும்.
-
மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
-
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
- சிவபெருமான் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.
-
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாரிசுகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.
|
மீனம் ராசி
| - மீன ராசியில் பிறந்தவர்களுக்கு தாயின் அன்பும் ஆதரவும் அதிகமாக கிடைக்கும்.
-
உறவினர்கள் மத்தியில் வீண்மனஸ்தாபம் ஏற்படும்.
-
சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்து விடும்.
-
வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
-
விநாயகர் வழிபாடு சிறந்தது. அத்துடன் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சல் ஏற்படலாம்.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).