குடும்ப ரகசியத்தை வெளியிட்ட கௌதம் கார்த்திக்! உருக்கமாக வெளியிட்ட பதிவு
தன்னுடைய குடும்பம் பிரியாமல் இருக்க தன்னுடைய பாட்டி தான் காரணம் என கௌதம் கார்த்திக் வெளியிட்ட உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் அறிமுகம்
கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் 90 களில் பிரபல நடிகராக காணப்பட்ட நவரச நாயகன் கார்த்திக்கின் மகன்.
இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “கடல்” என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து சிப்பாய், என்னமோ எதோ, வை ராஜா வை, இந்திரஜித், தேவராட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் இவரின் படங்கள் மக்கள் மத்தியில் நினைத்த வரவேற்பை பெறவில்லை.
கடந்தாண்டு வெளியான “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற திரைப்படத்தில் சினேகன், சரவணன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படம் குடும்பத்தை மையமாகக் கொண்டு அமைந்ததால் விமர்சகர்கள் ரீதியில் பெரிய வரவேற்பை பெற்றது.
காதல் திருமணம்
இந்நிலையில் தேவராட்டம் படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த மஞ்சுமா மோகன் என்ற பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
மேலும் இவரின் திருமணம் எளிய முறையில் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு பல பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து தன்னுடைய பாட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு பாட்டிக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்பான ஒரு வாழ்த்து பதிவை பதிவிட்டுள்ளார்.
உருக்கமான பிறந்த நாள் பதிவு
அதில்,“என் அன்பான பாட்டி எங்கள் முழு குடும்பத்தில் மதிப்பு மிக்க நபராக இருக்கிறார். எங்கள் குடும்பத்தைப் பிரியாமல் ஒன்றாக வைத்திருக்கும் அவருக்கு நன்றி. அவர் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் நேர்மையாகவும், அன்பாகவும் இருப்பதை நான் பார்க்கிறேன்.
மேலும் அதற்கு அவருக்கு என்னுடைய நன்றி. எங்களை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் எனது பாட்டி மகிழ்ச்சியாக இருக்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இவருடைய குடும்ப பாங்கை வெளிகாட்டிய விதத்தை பாராட்டியுள்ளார்கள்.