செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ஊறுகாய்... இப்படி செய்து அசத்துங்க!
பொதுவாகவே பெரும்பாலானவர்களின் விருப்பத்தக்குரிய உணவுகளின் பட்டியலில் ஊறுகாய் வகைகள் முக்கிய இடம் பிடித்துவிடுகின்றது.
குறிப்பாக பூண்டு ஊறுகாய் அதன் சுவைக்காக மாத்திரமன்றி ஆரோக்கிய நன்மைகளுக்கும் பெயர் பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.

பூண்டு ஊறுகாய் உணவில் சேர்த்துக்கொள்வதால், வாயுத் தொல்லைகளில் இருந்து விடுபடவும்,செரிமானத்தை மேம்படுத்தவும் பெரிதும் துணைப்புகின்றது.
மேலும், ஹார்மோன் சமநிலையை பேணுவதிலும்,எலும்பு அடர்த்தியை அதிகரிக்க செய்து மூட்டு வலியை குறைப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
இதில் உள்ள நைட்ரிக் ஆசிட் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதுடன், இன்சுலின் உணர் திறனை மேம்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் துணைப்புரிகின்றது.

தினசரி உணவில் பூண்டு ஊறுகாய் சேர்த்துக்கொள்வதால், நுரையீரல் பிரச்சனைகள் குறைவதுடன் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கின்றது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் பூட்டு ஊறுகாயை அசத்தல் சுவையில் வீட்டிலேயே எப்படி எளிமையான முறையில் தயாரிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பூண்டு - 500 கிராம்
மிளகாய் தூள் - 50 கிராம்
மல்லித்தூள் - 50 கிராம் (விருப்பத்துக்குரியது)
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
வெந்தயம் - 1 தே.கரண்டி
இஞ்சி விழுது - 2 தே.கரண்டி
கடுகு - 2 தே.கரண்டி
வெள்ளை உளுந்து - 2 தே.கரண்டி
ஊற வைத்த கொண்டைக் கடலை -2 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
புளிக் கரைசல் - ஒரு கப்
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

செய்முறை
முதலில் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்து இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பூண்டு, புளிக்கரைசல், கொண்டைக் கடலை ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசகை போகும் வரையில் நன்றாக வதக்கி, அதனுடன் இஞ்சி விழுதையும் சேர்த்துக் நன்றாக வதங்கவிட வேண்டும்.
பூண்டு நன்றாக வெந்ததும் எண்ணெய் பிரிந்து வரும், அப்போது பாத்திரத்தை இறக்கி, ஆறியதும் ஊறுகாயை பீங்கான் ஜாடி அல்லது கண்ணாடிக் குடுலைக்கு மாற்றினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பூண்டு ஊறுகாய் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |