கெட்ட கொழுப்பினை அடித்து விரட்ட வேண்டுமா? பூண்டை இப்படி எடுத்துக்கோங்க
உடம்பில் அதிகரிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை எவ்வாறு இயற்கையான முறையில் கட்டுப்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கொழுப்பு பிரச்சனை
நாம் தினமும் சமையலுக்கு அதிகமான பயன்படுத்தப்படும் பூண்டு கொழுப்பின் அளவை குறைக்கின்றது. அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகளைக் கொண்ட பூண்டு கொழுப்பை குறைப்பதுடன், பல ஆரோக்கிய நன்மையையும் அளிக்கின்றது.
இன்றைய காலத்தில் ஒவ்வொரு மனிதர்களுக்கு உடம்பில் கெட்ட கொழுப்பு பிரச்சனை அதிகமாகி வருகின்றது. இதன்காரணமாக இதய நோய் பிரச்சனை ஏற்பட்டு மாரடைப்பும் ஏற்படுகின்றது.
நமது உடம்பில் LDL எனப்படும் கெட்ட கொழுப்பும், HDL எனப்படும் நல்ல கொழுப்பும் காணப்படுகின்றது. இதில் எல்டிஎல் கொழுப்பு அதிகமானால் மனிதர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனை ஏற்படுகின்றது. நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் சிலவற்றை வைத்து கொழுப்பை குறைக்க முடியும்.

பூண்டு
பூண்டில் இருக்கும் அல்லிசின் கலவையானது, கெட்ட கொழுப்பின் அளவை 10லிருந்து 15 சதவீதம் குறைப்பதுடன், கல்லீரல் கொழுப்பினையும் குறைக்கின்றது.
அதுவே நல்ல கொழுப்பின் அளவையும் பராமரிக்கின்றது. ஏனெனில் பூண்டில் உள்ள ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுப்பதுடன், ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகின்றது.
தமனிகளில் பிளேக் படிவத்தை குறைத்து, பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சி அபாயத்தை குறைப்பதுடன், வீக்கத்தையும் குறைத்து இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது.

காலையில் வெறும் வயிற்றில் இரண்டு பச்சை பூண்டு பற்களை தண்ணீருடன் சாப்பிடுவது நன்மையை அளிக்குமாம். அதுமட்டுமின்றி பூண்டை குழம்பு, சட்னி, ரசம், ஊறுகாய் எனவும் வைத்து சாப்பிடலாம்.
ஆனால் இவ்வாறு சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது அதிக நன்மையை அளிக்கின்றது. அதே போன்று பூண்டு தேநீரையும் பருகலாம். பூண்டை சிறிதளது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

ஆனால் அதிகளவில் பூண்டை பச்சையாக சாப்பிடுவதும் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் ரத்தத்தை மெல்லியதாக்க மருந்துகளை உட்கொள்பவர்கள் பூண்டு சாப்பிடும் முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளவும்.
கெட்ட கொழுப்பினை குறைப்பதற்கு பூண்டை எடுத்துக் கொண்டாலும், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி இவற்றினை மேற்கொண்டால் இன்னும் அதிக மாற்றத்தினை பெறலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |