கங்குலி- நக்மா ரகசிய திருமணமா? காட்டுத்தீயாய் பரவிய வதந்தியும் பின்னணியும்
கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக திகழ்ந்த சௌரவ் கங்குலியின் நடிகை நக்மா மீது காதல் வயப்பட்டதாகவும், பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் உலாவந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
1990ம் ஆண்டு பாகி என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் நக்மா, அதே ஆண்டு தெலுங்கு படத்திலும் அறிமுகமானார்.
1992ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார் சௌரவ் கங்குலி, 90களில் தென்னிந்திய சினிமா, பாலிவுட் என பிரபலமாகி முன்னணி நடிகையாக வலம் வந்த நக்மாவின் திரைப்பயணமும் உச்சத்தை தொட்டது.
அதே ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார் கங்குலி, அக்கால கட்டத்திலேயே இருவருக்கும் காதல் மலர்ந்ததாக வதந்திகள் பரவியது.
கோவிலில் வைத்து இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டதாகவும், ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இத்தகவல்களால் மனமுடைந்து போன கங்குலியின் மனைவி விவாகரத்து செய்யும் முடிவை எடுத்ததாகவும் தெரிகிறது.
ஆனால் 2003ம் ஆண்டு கங்குலி- நக்மா இருவரும் பிரிந்து விட்டதாகவும், இத்தகவல்கள் வதந்தி என தெரியவந்த பின்னர் கங்குலியின் மனைவி விவாகரத்து முடிவை கைவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே பிரபல பத்திரிக்கை ஒன்றில் பேசிய நக்மா, அந்தந்த துறையில் உச்சத்தில் இருக்கும் போது வதந்திகள் வருவது இயல்பானது தான், நண்பர்கள் எப்போதும் நண்பர்கள் தான், எங்களுக்கு இடையேயான உறவு நிஜமானது, பிரிவு என்பதே கிடையாது என கூறினார்.
ஆனால் கங்குலி, நக்மாவுடனான உறவு குறித்து பேசியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |