இலங்கை சென்றால் இந்த கோவிலை மறக்காமல் பாருங்க! கண்களை கொள்ளையடிக்கும் அத்தனை அழகு..
பொதுவாக தமிழர்களின் பெருமையும் கலையம்சத்தையும் எடுத்து கூறுவது கோவில் தான்.
இந்த கோவில்களின் கட்டுமானமும் , ஓவியக்கலை மற்றும் வரலாறு என்பவற்றை பார்பதற்கும், கேட்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இதன்படி, கலையம்சம், கட்டுமானம், இயற்கை எழில், ஓவியக்கலை, சிற்பக்கலை, மன்னர்களின் சிறப்பு மற்றும் மன்னர்களின் பலம் ஆகியவற்றில் மேலோங்கி இருக்கும் நாடாக இலங்கை பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இவற்றை உள்ளடக்கியதாகவுள்ள கங்காராமய்யா கோவில் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கங்காராமய்யா கோவில் சிறப்புக்கள்
கங்காராமய ஆலயமானது இலங்கையிலுள்ள பௌத்த கோவில்களில் ஒன்றாகும். இது பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோவில் அமைத்து ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இன்றும் சுற்றுலாப் பயணிகளையும், பக்தர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இக்கோவில் காணப்படுகிறது.
இலங்கையின் கொழும்பு பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலின், பிரதான கருவறைக்குள் செல்லும் பாதைகள் மற்றும் கதவுகள் பார்ப்பவர்களை பெருமூச்சு விடும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதிலுள்ள பாதைகளின் ஓரத்தில் புராதான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இது தான் சுற்றுலா பயணிகளின்
கவனத்தை ஈர்க்க முக்கிய காரணமாகும்.
கட்டிடக்கலை
இந்த கோவிலின் கூரைகள் மற்றும் சுவர்களில் புத்த மதத்தின் கதைகளை எடுத்துரைக்கும் படங்கள் மற்றும் சின்ன ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
முற்பகுதியிலுள்ள பிரதான சன்னதியில், ஒரு பெரிய புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் அமைதியையும் அற்புதமான உணர்வையும் வெளிப்படுத்துகிறது.
கங்காராமய்யா கோவில் இந்திய, பர்மிய, தாய் மற்றும் சீன உள்ளிட்ட பல்வேறு கட்டிடக்கலைகளை கலந்து அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை அழகை பிரதிபலிக்கும் கோவில் தான் பௌத்த சின்னமாக அடையாளப்படுத்தப்படுகிறது.