நடிகர் விஜயகாந்த்திற்கு வைக்கப்பட்ட செய்வினை... பிரபல இசையமைப்பாளர் பகீர்
நடிகரும், தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்திற்கு செய்வினை வைக்கப்பட்டதாக பிரபல இசையமைப்பாளர் கூறியுள்ளார்.
நடிகர் விஜயகாந்த்
கோலிவுட்டின் கருப்பு எம்ஜிஆர் என அழைக்கப்பட்ட விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்கு ஆயிரக்கான ரசிகர்கள், பிரபலங்கள் என இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பலரும் அவரைக் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ள நிலையில், இசையமைப்பாளர் கங்கை அமரன் அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.
தொலைபேசி வாயிலாக ஊடகம் ஒன்றிற்கு பேசிய அவர், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்தும் பழைய நிலைக்கு திரும்பாமல் விஜயகாந்த் போனது ஏமாற்றத்தினை அளித்துள்ளது.
அவர் சாப்பிடும் உணவில் பிரச்சினை ஏற்பட்டதா என்ற சந்தேகம் தோன்றுகின்றது. இவ்வளவு சிகிச்சை எடுத்தும் சரியாகாத அவருக்கு செய்வினை தான் காரணம் என்று கூறியுள்ளார்.
கம்பீரமாக பேசிய அவரது குரலும், அவரது கைகளும் முடக்கப்பட்டதும் யாரால்? ஆன்மீகத்தின் மூலம் விஜயகாந்துக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்திருக்கலாமோ என யோசிக்கத் தோன்றுகிறது.
அவர் இறக்கும் வயதே இது இல்லை... இன்னும் அதிக காலம் வாழ வேண்டியவர். கடந்த சில ஆண்டுகளாக அவரை நான் பார்க்கமுடியவில்லை... அவ்வாறு பார்த்திருந்தால் ஆன்மீகத்தில் மூலம் அவரை குணப்படுத்த அறிவுறுத்தியிருப்பேன் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |