என்னை மச்சான் என அழைத்த பிரபல நடிகை! அனாதை பிணமாக கிடந்தார்! கங்கை அமரன் ஓபன் டாக்
தன்னை மச்சான் என்ற அழைத்த தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் அனாதை பிணமாக கிடந்தார் என கங்கை அமரன் கூறிய கூற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கங்கை அமரன் சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் இருந்து வருபவர் தான் கங்கை அமரன். இவர் பிரபல பாடகர் இளையராஜாவின் தம்பி எனக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கங்கை அமரன் இசையமைப்பாளர் மட்டுமல்லாது பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமைகளை கொண்டவராக காணப்பட்டுள்ளார். இவரின் மகன்மார்கள் தான் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகிய இருவரும்.
இவர் தமிழ் சினிமாவில் கோழிகூவுது, கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இதில் “கரகாட்டக்காரன்” திரைப்படம் எதிர்பாராத வெற்றியை கொடுத்தது.
இதனை தொடர்ந்து சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், வாழ்வே மாயம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சில்க் சுமிதாவிடம் மறைந்திருக்கும் மற்றுமொரு குணம்
இந்த நிலையில் மறைந்த நடிகை சில்க் சுமிதா பற்றி பேசியுள்ளார். அதில், “ மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்தாலும் “அலைகள் ஓய்வதில்லை” என்ற படத்தில் குடும்ப பெண்ணாக நடித்திருப்பார்.
இவரின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது, இதனால் தான் அவரை நான் “ கோழி கூவுது” என்ற திரைப்படத்தில் புடவையில் நடிக்க வைத்தேன். இவர் என்னை மச்சான் என்று தான் அழைப்பார். சினிமாவில் படங்கள் இல்லாத நேரங்களில் என்னுடைய மனைவியுடன் சேர்ந்து சமைப்பார்.
இவர் இறந்த பின்னர் அனாதை பிணமாக கிடந்தார் என்று நினைக்கும் போது கவலையாக இருந்தது. இந்த நிலைமை எதிரிக்கு கூட வரக் கூடாது. மேலும் சில்க்கால் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க முடியும். இவர் அளவிற்கு யாராலையும் கவர்ச்சியை காட்ட முடியாது”எனக் கூறினார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ சில்க் சுமிதாவிடம் இவ்வளவு பெரிய குணம் இருக்கிறதா?” என சந்தேகிக்கும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.