சிம்ம ராசியில் உருவாகும் கஜகேசரி யோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள்!
ஜோதிட ரீதியில் நவ கிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிகம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்வகையில், தேவர்களின் குருவாகக் கருதப்படும் குரு பகவான் அக்டோபர் 31ஆம் தேதி கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார்.

இதைத் தொடர்ந்து, மனதின் காரணியாகக் கருதப்படும் சந்திரன் நவம்பர் 2ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இதனால் சிம்ம ராசியில் குரு, சந்திரன் சேர்க்கை ஏற்பட்டு, கஜகேசரி யோகம் உருவாகிறது.
ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான யோகமாகக் கருதப்படும் இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அதிக அதிர்ஷ்டத்தையும் நற்பலன்களையும் தரும் எனக் கூறப்படுகிறது.
அப்படி நவம்பர் மாதத் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி யோகத்தால் தொழில், நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 5ஆம் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாவதால், சிந்திக்கும் திறனும் முடிவெடுக்கும் திறனும் மேம்படும். தொழிலில் முன்னேற்றம் காணவும், ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் லாபம் பெறவும் வாய்ப்புள்ளது.
பணியிடத்தில் கடின உழைப்புக்கான அங்கீகாரமும், உயர் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.
புதிய வழிகளில் வருமானத்துக்கான ஆதாரங்கள் கிடைக்கும்.
கடகம்

கடக ராசியின் 2ஆம் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாவதால், பேச்சுத்திறன் மேம்படுவதுடன் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
பரம்பரைத் தொழில் செய்பவர்களுக்கு வருமானத்தைப் பெருக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் புரிதலும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நிதிப் பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாவதால், தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். பணியிடத்தில் சிறப்பாகச் செயல்பட்டு, பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பெற வாய்ப்புள்ளது.
சொந்தத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். திருமணமாகாதவர்கள் தங்களுக்கான துணையைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 10ஆம் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாவதால், பணியிடப் பிரச்சனைகள் குறைந்து பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் லாபம் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், ஆரோக்கியத்தைப் பேண அன்றாட நடைமுறைகளிலும் உணவுப் பழக்கங்களிலும் கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக நிதி நிலையில் ஏற்றம் உண்டு.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |